search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சானியா மிர்சா"

    • விம்பிள்டன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
    • அரையிறுதியில் முதல் செட்டை கைப்பற்றிய சானியா ஜோடி அடுத்த இரு செட்டை இழந்து தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
    • எதிர் ஜோடி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா ) ஜோடி, இவான் டாடிக் (குரேஷியா) - லதிஷா சான் (சீன தைபே) ஜோடியுடன் மோத இருந்தது.

    இந்நிலையில், கடைசி கட்டத்தில் இவான் டாடிக், லதிஷா சான் ஜோடி போட்டியில் இருந்து விலகியதால், சானியா மிர்சா, மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • சானியா மற்றும் பாவிக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
    • 35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- பாவிக் ஜோடி விளையாடி வருகிறது.

    ஆறாம் நிலை வீராங்கனையான சானியா மற்றும் பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஸே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.

    குழந்தை பெற்ற பிறகு மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப இருக்கும் சானியா மிர்சா, முன்னணி நிலைக்கு வருவது எளிதான காரியம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்தவர் சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாட தீர்மானித்துள்ளார்.

    இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில் ‘‘நான் முன்னர் மனைவியாக இருந்தேன். தற்போது அம்மாவாகியுள்ளேன். மீண்டும் டாப் நிலையை பெற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அது மிகவும் எளிதானது கிடையாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை செய்வதைவிட வேறு மதிப்பு ஏதும் இல்லை.

    என்னுடைய யதார்த்தமான இலக்கே மீண்டும் டென்னிஸ் விளையாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதுதான். இந்த வருட இறுதியில் அது நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன் பேசும்போது 2020-ல் மீண்டும் விளையாட்டிற்கு திரும்புவேன் என்றேன். அதற்கு காரணம் உள்ளது. எனக்கு நானே நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. தற்போது வரை அதை நான் செய்யவில்லை.

    குழந்தை வீட்டில் இருக்கும்போது வாழ்க்கை பெரிய அளவில் மாற்றமடைகிறது. எந்தவொரு விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அவர்களது வாழ்க்கையில் சிறிதளவு செல்பிஷ் உள்ளது. இது அவர்களின் பிட்னெஸ், ஓய்வு மற்றும் வேலையைப் பற்றியது’’ என்றார்.
    ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா விடுவிக்கப்பட்டார். #TOPSAthlete
    புதுடெல்லி:

    2020, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் டாப்ஸ் எனப்படும் சிறப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முழு பயிற்சி தரப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி தரப்பட உள்ளது. இந்த பட்டியலில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பெயரும் இடம் பெற்றிருந்தது.

    இந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின், ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா உள்பட 8 வீரர்களின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சானியா மிர்ஸா தற்போது கர்ப்பமாக உள்ளதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 5 மல்யுத்த வீரர்களும், இரண்டு குத்துச்சண்டை வீரர்களின் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.


    இதில் தடகள வீரர்களான லில்லி தாஸ், சஞ்சீவினி யாதவ், தேஜஸ்வினி சங்கர் ஆகியோரும், தடகள வீரர்களான தருண்குமார், மோகன்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் 2020-ம் ஆண்டு வரை டாப்ஸ் திட்டத்தில் கீழ் பயிற்சி பெறுவர்.

    துப்பாக்கி சுடுதலில் 14, பேட்மிண்டனில் 10, குத்துச்சண்டையில் 6, மல்யுத்தத்தில் 4, தடகளம், வில்வித்தை, பளுதூக்குதலில் தலா 2 பேர் என மொத்தம் 41 பேர் இடம் பெற்றுள்ளனர். மிஷன் ஒலிம்பிக் செல் என்ற குழு இதற்கான வீரர்களை தேர்வு செய்தது. இந்த பட்டியல் அவ்வப்போது பரிசீலிக்கப்படும் என சாய் இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் தெரிவித்துள்ளார். #Olympic #TOPSAthlete #SAI
    ×